கீழணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு

Sep 11, 2019 12:14 PM 39

கீழணையில் இருந்து பாசனத்திற்கான 2,600 கன அடி தண்ணீரை அமைச்சர் எம்.சி. சம்பத், அரசு கொறாடா தாமரை ராஜேந்திரன் ஆகியோர் மலர் தூவி திறந்து வைத்தனர்.

மேட்டூர் அணையில் இருந்து கடந்த மாதம் 13ம் தேதி திறந்து விடப்பட்ட தண்ணீரானது கல்லணை வந்தடைந்த தண்ணீர் கீழணையில் தேக்கப்பட்டது. இந்த நிலையில் பாசனத்திற்காக இங்கிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. கீழணையில் இருந்து வடவாறு வாய்க்காலில் 1,800 கன அடி தண்ணீரும், வடக்கு ராஜன் வாய்க்காலில் 400 கனஅடி தண்ணீரும், தெற்கு ராஜன் வாய்க்காலில் 400 கன அடி நீர் என்று மொத்தமாக 2600 கன அடி தண்ணீர் வினாடிக்கு
திறந்து விடப்பட்டுள்ளது.

Comment

Successfully posted