தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து கிரண்பேடி விளக்கம்

Feb 11, 2019 03:04 PM 140

புதுச்சேரியில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து ஆளுநர் கிரண்பேடி வாகன ஓட்டிகளுக்கு சாலையில் நின்று அறிவுரை வழங்கினார்.

புதுச்சேரியில் இன்று முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் வில்லியனூர் பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்ற கிரண்பேடி,ரெட்டியார்பாளையம் சாலையில், அப்பகுதியாக வந்த வாகன ஓட்டிகளிடம் ஏன் தலைக்கவசம் அணியவில்லை என கேள்வி எழுப்பியதோடு, அதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தார். மேலும், அதிக அளவில் பயணிகளை ஏற்றி வந்த ஆட்டோ ஓட்டுநர்களை எச்சரிக்கை செய்து அனுப்பினார்.

Comment

Successfully posted