ஐ.பி.எல். 2020 கொல்கத்தா - ஹைதராபாத் அணிகள் இன்று பலப்பரீட்சை

Sep 26, 2020 05:21 PM 591

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில், கொல்கத்தா- ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணி, தனது முதல் ஆட்டத்தில் மும்பை அணியிடம் படுதோல்வியை சந்தித்தது. இதே போல், டேவிட் வார்னர் தலைமையிலான ஹைதராபாத் அணி, முதல் ஆட்டத்தில் பெங்களூரு அணியிடம் தோல்வியடைந்தது. இந்நிலையில், இன்று நடைபெறவுள்ள போட்டியில் வெற்றி பெற்று, நடப்பு தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் இரு அணி வீரர்களும் தீவிரமான பயிற்சியை மேற்கொண்டுள்ளனர்.

இந்தப் போட்டியானது அபுதாபி ஷேக் சையது மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.

Comment

Successfully posted