கோவளத்தில் நடைபெற்ற மழைநீர் வடிகால் பணிகள் நிறுத்திவைப்பு!

Jan 12, 2021 07:25 AM 10147

கோவளம் வடிநிலப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வந்த மழைநீர் வடிகால் பணிகள், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி நிறுத்திவைக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சியின் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் வசதிகளை எற்படுத்த ஒருங்கிணைந்த வடிகால் அமைக்கும் திட்டம் கோவளம் வடிநிலப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு சில குடியிருப்பு வாசிகள் எதிர்ப்பு தெரிவித்து தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதுகுறித்து ஆய்வு செய்ய பசுமைத் தீர்ப்பாயத்தால் அமைக்கப்பட்ட குழு தனது அறிக்கையை சமர்ப்பித்தது. இதுதொடர்பான விசாரணையில், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, அனைத்து பணிகளும் நிறுத்திவைக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கின் விசாரணை மார்ச் 2ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Comment

Successfully posted