கோயம்பேடு பேருந்து நிலையம்,  புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் என பெயர் மாற்றம்

Oct 10, 2018 12:43 PM 769

 

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

ஆசியாவின் மிகப்பெரும் பெருந்து நிலையங்ளில் கோயம்பேடு பேருந்து நிலையம் இரண்டாம் இடத்தில் உள்ளது.

இந்த பேருந்து நிலையத்தில் இருந்து வெளிமாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு,  ஆயிரக்கணக்கில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு அரசு சேவை மையங்கள், பால் புகட்டும் அறை, காவல் நிலையம், மகளிர் சேவை மையம், மெட்ரோ ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் இங்கு உள்ளன.

இந்த பேருந்து நிலைய சந்திப்பில் லட்ச கணக்கில் பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

இத்தனை சிறப்பு அம்சங்கள் நிறைந்த கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு அத்தனை சிறப்புகளையும் உள்ளடக்கி பெயர் மாற்றம் செய்யப்படும் என செப்டம்பர் 30ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவின்போது அறிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் இன்று கோயம்பேடு பேருந்து நிலையம், புரட்சித் தலைவர் டாக்டர்  எம்ஜிஆர் பேருந்து நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

Related items

Comment

Successfully posted

Super User

Hats off to CM and DCM.


Super User

super


Super User

தலைவர் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும். நன்றி, ஒருங்கினைப்பாளர், இணை ஒருங்கினைப்பாளர் அவர்களே!தலைவர் மற்றும் அம்மா இருவரும் நமது கண்கள்! சிறப்புடன் செயல் படுங்கள்! என்றும் நாங்கள் உங்கள் பின்னால் !


Super User

✌✌✌✌✌ தலைவர் புகழ் வாழ்க!அம்மா புகழ் ஓங்குக!!


Super User

மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவர் பொன்மனச்செம்மல் அவர்களின் நூற்றாண்டு நிறைவு ஆண்டில் அவரின் பெயர் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு சூட்டியது மிகவும் முக்கியமானது.நன்றி தமிழக அம்மாவின் அரசுக்கு.