மூணாறில் 12 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலர் சீசன் முடிவுக்கு வந்தது

Nov 03, 2018 01:03 PM 567

ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்த நீல குறிஞ்சி மலர் சீசன் முடிவுக்கு வந்துள்ளது.

கேரள மாநிலம் மூணாற்றில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலர் இந்த ஆண்டு கடந்த ஆகஸ்ட் மாதம் இறுதியில் பூத்தது. இதை காண நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

கேரள மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக எதிர்பார்த்த அளவிற்கு சுற்றுலா பயணிகளின் வருகை காணப்படவில்லை என கூறப்படுகிறது.

இருப்பினும், 2 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் குறிஞ்சி மலரை கண்டு ரசித்தனர். இந்நிலையில், குறிஞ்சி மலரின் சீசன் தற்போது முடிவுக்கு வந்துள்ளதால், சுற்றுலா பயணிகளின் வருகை கணிசமாக குறைந்துள்ளது.

Comment

Successfully posted