அஜித்தை வீடியோ எடுத்தேன்.. வாழ்க்கை கேள்விக்குறியாகிவிட்டது - பெண்ணின் கதறல்!

Apr 22, 2021 01:58 PM 2425

நடிகர் அஜித்தை வீடியோ எடுத்தால் வாழ்க்கையே கேள்விக்குறியாகி தவிப்பதாக பெண் ஒருவர் பரபரப்பு புகாரை தெரிவித்து இருக்கிறார்.

சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த பர்ஜானா, பிரபல தனியார் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி வந்தார். கடந்த ஆண்டு மே மாதம் இந்த மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த நடிகர் அஜித்தை வீடியோ எடுத்த பர்ஜானா, அவருடன் செல்பி எடுத்துள்ளார். பர்ஜானாவின் இந்த செயலால் அதிருப்தி அடைந்த மருத்துவமனை நிர்வாகம், அவரை எச்சரித்தது.

எனினும் அடுத்த சில நாட்களில் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் கசிந்ததால், பர்ஜானா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். பின்னர் மீண்டும் வேலைக்கு சேர்ந்த அவர் வேறு சில காரணங்களுக்காக நிரந்தரமாக நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திராவை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பர்ஜானா, தனது நிலையைக் கூறி, தான் நடிகர் அஜித்தை சந்திக்க வேண்டும் என்றும் அவர் சொன்னால் தனக்கு மீண்டும் வேலை கிடைக்கும் என்றும் கூறியுள்ளார். எனினும் பர்ஜானாவுக்கு உதவ அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா மறுத்துவிட்டார்.

Comment

Successfully posted