`போடா!’ - காவல்துறையினரை ஆபாச வார்த்தைகளால் திட்டி பெண் அடாவடி #ViralVideo

Jun 06, 2021 12:28 PM 2181

சென்னை கீழ்பாக்கத்தில் இ-பாஸ் இல்லாமல் சென்றதற்காக அபராதம் விதித்த போக்குவரத்து காவலரை, பெண் வழக்கறிஞர் ஒருவர் ஆபாசமாக திட்டி, மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேத்துபட்டு சிக்னல் அருகே போக்குவரத்து காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த காரை மடக்கி சோதனை செய்தனர். இ-பதிவு இன்றி காரில் வந்த இளம் பெண்ணுக்கு அபராதம் விதித்தனர். தகவல் அறிந்து வந்த இளம் பெண்ணின் தாயார், போக்குவரத்து காவலர்களை ஆபாச வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்தார். தான் ஒரு வழக்கறிஞர் என்று கூறிய அவர், போக்குவரத்து காவலரை பணியில் இருந்து நீக்கி விடுவேன் என ஒருமையில் பேசியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக சேத்துப்பட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comment

Successfully posted