சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்

Apr 28, 2021 01:32 PM 628

சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மண்டல வாரியாக பாதிப்பை தற்போது காணலாம்...

அதிகபட்சமாக தேனாம்பேட்டை மண்டலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 3 ஆயிரத்து 210ஆக அதிகரித்துள்ளது.

இதற்கு அடுத்தபடியாக அண்ணா நகரில் 3 ஆயிரத்து 165 பேரும், கோடம்பாக்கத்தில் 2 ஆயிரத்து 935 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அம்பத்தூர் மண்டலத்தில் 2 ஆயிரத்து 832 பேரும், திரு.வி.க. நகரில் 2 ஆயிரத்து 599 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அடையாறில் 2 ஆயிரத்து 503 பேரும், ராயபுரத்தில் 2 ஆயிரத்து170 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தண்டையார்பேட்டையில் ஆயிரத்து 944 பேரும், வளசரவாக்கத்தில் ஆயிரத்து 911 பேரும், ஆலந்தூரில் ஆயிரத்து 757 பேரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

மண்டல வாரியான பாதிப்பு

தேனாம்பேட்டை-3,210-10%

அண்ணா நகர்-3,165-9%

கோடம்பாக்கம்- 2,935-9%

அம்பத்தூர்-2,832-12%

திருவிக நகர்- 2,599-10%

அடையாறு- 2,503-10%

ராயபுரம்- 2,170 -8%

தண்டையார்பேட்டை - 1,944 - 9%

வளசரவாக்கம்- 1,911-10%

ஆலந்தூர் -1757 -13%

Comment

Successfully posted