டிசம்பர் 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - தமிழக அரசு அறிவிப்பு!

Nov 30, 2020 09:26 AM 1092

தமிழகத்தில் ஊடரங்கு டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 

 

1. கலை அறிவியல், பொறியியல், வேளாண்மை, மீன்வளம், உள்ளிட்ட அனைத்து கல்லூரிகள் / பல்கலைக் கழகங்களில் இளநிலை இறுதியாண்டு வகுப்புகள் 7.12.2020 முதல் தொடக்கப்படும்.

2) அனைத்து மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் இளநிலை , முதுநிலை வகுப்புகள் 7.12.2020 முதல் திறக்க அனுமதிக்கப்படுகிறது. எனினும், 2020-2021 கல்வியாண்டில் சேரும் புதிய மாணாக்கர்களுக்கான வகுப்புகள் 1.2.2021 முதல் தொடங்கும்.

3) நீச்சல் குளங்கள், விளையாட்டுப் பயிற்சிக்காக (sports Training) மட்டும் செயல்பட அனுமதி

4) நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, 14.12.2020 முதல் மெரினா உள்ளிட்ட கடற்கரைகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படும்.

5), உள் அரங்கங்களில் மட்டும், அதிகபட்சம் 50 சதவிகித இருக்கைகள் அல்லது அதிகபட்சமாக 200 நபர்கள் பங்கேற்கும் வண்ணம் சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் 1.12.2020 முதல் 31.12.2020 வரை நடத்த அனுமதிக்கப்படுகிறது.

6. தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு கடைபிடிக்கப்படும்.

தமிழ்நாட்டிற்குள் வருபவர்களுக்கு தற்போது நடைமுறையிலுள்ள இ-பாஸ் முறை, தொடர்ந்து அமல்படுத்தப்படும்.

 

Comment

Successfully posted