தமிழகத்தில் மேலும் ஒருவாரம் ஊரடங்கு நீட்டிப்பு?

Jun 11, 2021 07:21 AM 2772

தமிழ்நாட்டில் மேலும் ஒரு வாரம் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பது குறித்து, அதிகாரப் பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக, அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 14ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில், ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாகவும், கூடுதல் தளர்வுகள் வழங்கப்படுவது தொடர்பாகவும் மருத்துவ நிபுணர் குழுவுடன் தமிழக அரசு நேற்று ஆலோசனை நடத்தியது. அப்போது, தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கை நீட்டிக்க மருத்துவ நிபுணர் குழு பரிந்துரைத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தொற்று பரவல் அதிகமாக உள்ள 11 மாவட்டங்களை தவிர்த்து, மற்ற மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கை நீட்டிக்க தமிழக அரசு முடிவுசெய்துள்ளது. இதனையடுத்து, ஊரடங்கு நீட்டிப்பது குறித்து அதிகாரப் பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comment

Successfully posted