வைரலாகும் லாஸ்லியாவின் குத்து டான்ஸ் வீடியோ..

Oct 09, 2019 04:33 PM 604


100 நாள் நடைபெறும் பிக்பாஸ் போட்டியில் உள்ளே செல்பவர்களுக்கு எதிர்பாராத அன்பு கிடைக்கும் என்பதை நாம் அறிவோம்.ஆனால் பிக்பாஸ் வீட்டில் சென்ற ஒரே வாரத்திலேயே லாஸ்லியாவுக்கு army உருவானது.பின்பு அவரின் பாடல் மற்றும் செல்ல செய்கைகளால் பார்வையாளர்களை மேலும் கவர்ந்தார்.பிக்பாஸ் வீட்டில் 106 நாட்கள் இருந்துவிட்டு வெளியே வந்த லாஸ்லியாவுக்கு எதிர்பாராத வரவேற்பு கிடைத்தது.

பிக்பாஸ் முதல் சீசனில் ஓவியா டைட்டில் வெல்ல வில்லை என்றாலும் ,அவருக்கான ரசிகர் கூட்டம் அதிகம்.அதே போல் தற்போது லாஸ்லியாவுக்கும் ரசிகர் கூட்டம் அளவற்றதாக உள்ளது.இந்நிலையில் நண்பர்களுடன் சேர்ந்து லாஸ்லியா,விஜய் நடித்த சச்சின் படத்தில் இடம்பெற்றுள்ள ’வாடி வாடி’ பாடலுக்கு குத்து டான்ஸ் ஆடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

Comment

Successfully posted