உன்ன அப்படியா வளர்த்தேன் ? மனம் உருகி கேள்வி கேட்ட லாஸ்லியாவின் தந்தை

Sep 11, 2019 06:44 PM 441

இன்று பிக்பாஸ் வீட்டின் 80வது நாள்.இந்த வாரம் முழுவதும் போட்டியாளர்களுக்கு நெருக்கமானவர்கள் வீட்டினுள் வரவுள்ளனர்.ஏற்கனவே முகெனின் அம்மா, தங்கை ஆகியோர் வந்த போது பிக்பாஸ் வீடே எமோஷனல் வீடாக மாறியது.இன்று பிக்பாஸ் வீட்டிற்கு லாஸ்லியாவின் தந்தை வரவுள்ளார்.

அப்பாவை பார்த்தவுடன் சத்தம் போட்டு கதறி அழுது கால்களை கட்டி தழுவி கொள்கிறார்.லாஸ்லியாவின் தந்தையோ அவரின் முகத்தை கூட பார்க்காமல் கோவாமாக லாஸ்லியாவிடம் ‘நீ என்ன சொல்லி வந்த , உன்ன அப்படியா வளர்த்தேன்,இது எல்லாம் நான் கதைக்க கூடாது என கூற, சேரனோ ஒன்னுமில்ல உள்ள வாங்க என கூறுகிறார்.’என்ன எல்லார் முன்னாடியும் அவமான பட வச்சிட்ட, எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு உள்ள வா என சொல்லி விட்டு வீட்டினுள்ளே செல்கிறார்.கவினோ திகைத்து போய் நிற்கிறார். லாஸ்லியாவோ 10 வருடங்கள் கழித்து தன் தந்தையை பார்த்துமே தந்தை தன்னிடம் முகம் கொடுத்து கூட பேசவில்லை என அழுகிறார்.தந்தைக்காக கவினின் காதலை உதறிவிட்டு செல்வாறா லாஸ்லியா ? பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

Comment

Successfully posted