சிலிம் பாடி, கருப்பு கண்ணாடி : சிம்புவின் ஆட்டம் இனி ஸ்டார்ட்

Feb 19, 2020 12:27 PM 1022

1984 ஆம் ஆண்டு நடிகர் சிம்பு சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கியவர்.பின்பு 2002 ஆம் ஆண்டு காதல் அழிவதில்லை திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.பின்பு தொடர்ந்து படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடத்தை உருவாக்கினார்.

image

பின்பு நாளடைவில் இவரை லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்க ஆரம்பித்தனர்.தற்போது STR என்றும் அழைத்து வருகின்றனர்.இந்நிலையில்
‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்திற்கு மாநாடு படத்தில் நடிக்கப்போவதாக அறிவிப்புகள் வெளியாகியது.

image

ஆனால் பல மாதங்களாக படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருந்தது. காலமும் நேரமும் கடந்துகொண்டே போவதால் படத்தைக் கைவிடுவதாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்தார்.

image

மாநாடு படம் கைவிடப்படுவதாக செய்திகள் வெளியான நிலையில் ‘மகா மாநாடு’ என்ற படத்தை தானே தயாரித்து, இயக்கி, நடிக்கவும் சிம்பு முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகின.

image

ஆனால் மீண்டும் சுரேஷ் காமாட்சியே இந்த படத்தை தயாரிக்க உள்ளார் என்ற செய்திகளும் வெளியானது.இப்படி ஆரம்பம் முதலே குழப்பமாக இருந்த மாநாடு படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது.

image

இந்த புகைப்படத்தில் சிம்பு சிலிம்மாக புது லுக்கில் உள்ளார்.முதற்கட்ட படப்பிடிப்பை சென்னையில் 50 நாட்கள் எடுக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.மேலும் ‘மாநாடு’திரைப்படம் ஜூன் மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comment

Successfully posted