நல்ல நிலையில் மதுசூதனன் உடல்நலம்: முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு

Jul 21, 2021 04:57 PM 2367

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தாலும், அவர் நல்ல நிலையில் இருப்பதாக, முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

உடல்நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்
அதிமுக அவைத் தலைவர் மதுசூதனின் உடல்நலம் குறித்து, முன்னாள் அமைச்சர் கடம்பூர்
ராஜூ நேரில் சென்று நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் அவைத்தலைவர் மதுசூதனனை நேரில் கண்டதாகவும், தொடர் சிகிச்சைகள் மூலம் அவர் நல்ல நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் விளக்கமளித்ததாகவும் கூறினார்.

Comment

Successfully posted