மதுரை வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தில் நீர் நிரப்ப நடவடிக்கை -   தமிழக அரசுக்கு மக்கள் பாராட்டு 

Nov 21, 2018 06:33 PM 710

புகழ்பெற்ற மதுரை வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தில் நீர் நிரப்ப நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தின் இரண்டாவது பெரிய தெப்பக்குளமாக கருதப்படும் மதுரை வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்திற்கு, ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் முதல் தை மாதம் வரை ஐயப்ப மற்றும் முருக பக்தர்கள் சுற்றுலா பயணிகள் வந்துசெல்லும் இடமாகவும், புகழ்பெற்ற சுற்றுத்தலமாகவும் விளங்கி வருகிறது.

இந்நிலையில், தெப்பக்குளத்தில் நீர்நிரப்ப வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து தமிழக அரசின் துரித நடவடிக்கையால் வைகை ஆற்றில் இருந்து மின்மோட்டார் மற்றும் தனி வாய்க்கால் அமைக்கப்பட்டு தெப்பக்குளத்திற்கு நீர்நிரப்ப ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும், தெப்பக்குளத்தில் படகு சவாரி செய்யவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

Comment

Successfully posted

Super User

நல்ல காரியங்கள் நடக்கட்டும்