அவளைப் புதைத்து விட்டேன்... கடிதத் துப்பை வைத்து உடலைத் தேடி தோண்டும் பணி தீவிரம்

May 05, 2021 12:30 PM 1630

சித்ரா தேவியின் உடலை தோண்டி பிரேதப் பரிசோதனை துவங்க உள்ளது

மதுரை திருமங்கலம் ஆறுமுகம் நடுத் தெருவில் வசித்து வந்த வழக்கறிஞர் ஹரிகிருஷ்ணன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவரது கடிதத்தில் யோகா ஆசிரியை சித்ரா தேவியை கொலை செய்து வீட்டின் குளியலறையில் புதைத்து வைத்துள்ளதாக எழுதி வைத்து இருந்ததால் இறந்த வழக்கறிஞரின் கடிதத்தின் அடிப்படையில் குளியலறையை தோண்டும் பணி தற்போது நடைபெறுகிறது.

உடலை மீட்டு சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்வதற்காக மருத்துவர்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இருந்து வருகை தந்துள்ளனர். திருமங்கலம் தாசில்தார் பொறுப்பு முத்துப்பாண்டி முன்னிலையில் காவல்துறையினர் சம்பவ இடத்தில் தோண்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பெண்ணின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்துள்ளது பரபரப்பான சூழ்நிலை உருவாகியுள்ளது

Comment

Successfully posted