ஓடும் கப்பலில் செல்பி எடுத்த மகாராஷ்டிரா முதலமைச்சரின் மனைவி !

Oct 22, 2018 01:25 PM 315

மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிசின் மனைவி அம்ருதா பட்னாவிஸ் ஓடும் கப்பலில் ஆபத்தை உணராமல் செல்பி எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மும்பையில் இருந்து கோவா செல்லும் சொகுசு கப்பலின் துவக்க விழா நடைபெற்றது. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சொகுசுக் கப்பலை துவக்கி வைத்தார். இந்த விழாவில் மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் அவரது மனைவி அம்ருதாவும் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியின் போது கப்பலின் முனைப்பகுதிக்கு சென்று அமர்ந்த அம்ருதா, கப்பலை ரசித்து கொண்டிருந்தார். அப்போது காவல்துறை உயர் அதிகாரிகள், சற்று பணிவாக எச்சரித்ததையும் அவர் பொருட்படுத்தவில்லை. பின்னர் ஒரு செல்பியும் எடுத்து கொண்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Comment

Successfully posted