கொலை வழக்கின் முக்கிய சாட்சிக்கு சரமாரி வெட்டு - ஆற்றுக்குள் உயிருக்கு போராட்டம்

Oct 06, 2020 09:33 PM 350

புதுச்சேரியில் சங்கரபாணி ஆற்றில், சரமாரியாக, வெட்டப்பட்ட நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இளைஞரை, காவல்துறையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

வில்லியனூர் சங்கரபாணி ஆற்றில் இளைஞர் வெட்டப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டு இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது, ஐய்யங்குட்டி பாளையம் பகுதியைச் சேர்ந்த அரவிந்த் என்பதும், காரைக்காலில் கார்த்தி என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கின் முக்கிய சாட்சி என்பதும் தெரியவந்தது.

மேலும், அரவிந்த் நேற்று மாலை கடத்தப்பட்டதாக வானூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Comment

Successfully posted