ஒருதலைக் காதலால் இளம்பெண் கொன்ற இளைஞரைக் கல்லால் அடித்துக் கொன்ற கிராமம்

Jun 05, 2021 12:10 PM 3937

ஆந்திராவில் காதலை ஏற்க மறுத்த இளம்பெண்ணை கொலை செய்த இளைஞரை, கிராம மக்கள் கல்லால் அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சித்தூர் மாவட்டத்தில் உள்ள சாம்பய்யாகண்டிரிகை கிராமத்தை சேர்ந்த சின்னா என்ற இளைஞர், அதே ஊரைச் சேர்ந்த சுஷ்மிதா என்ற இளம்பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். சின்னாவின் காதலை சுஷ்மிதா ஏற்க மறுத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சின்னா வீட்டில் தனியாக இருந்த சுஷ்மிதாவை கழுத்து அறுத்து கொலை செய்தார்.

தன்னுடைய கழுத்தையும் கத்தியால் அறுத்து அவர் தற்கொலைக்கு முயன்றார். அப்போது, சின்னாவை கல்லால் அடித்து கிராம மக்கள் கொன்றனர். சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comment

Successfully posted