விஜய் - விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு பொங்கல் பரிசு ..!

Jan 15, 2020 05:14 PM 1976நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடித்துள்ள "மாஸ்டர்" படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியானது ..
‘பிகில்’ திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய், அடுத்ததாக  இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். எக்ஸ் பி ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்தில் மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு பாக்யராஜ் உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படம் 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாஸ்டர் படத்தில்  விஜய்க்கு எதிராக விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார்.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை புத்தாண்டை முன்னிட்டு டிசம்பர் 31ம் தேதி வெளியிட்ட படக்குழுவினர், "மாஸ்டர்" என்று படத்திற்கு தலைப்பு வைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாமல் விஜய் சேதுபதியின் ரசிகர்களும் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.

 image

 

 

நடிகர் விஜய் சேதுபதியின் பிறந்த தினமான ஜனவரி 16-ந் தேதி அன்று செகண்ட் லுக் போஸ்டர் வெளியிடப்படும் என  தகவல் வெளியான நிலையில் இன்று மாஸ்டர் படத்தின்  செகண்ட் லுக் போஸ்டர் வெளியானதுComment

Successfully posted