மீ டூ விவகாரத்தில் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்ய முடியாது - உச்சநீதிமன்றம்

Oct 22, 2018 01:09 PM 307

மீ டூ விவகாரத்தில் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் தொல்லை குறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் மீ டூ என்னும் ஹேஸ்டேக்கை பயன்படுத்தி சமூக வலைத்தளங்களில் வெளிப்படையாக எழுதி வருகின்றனர். இதனை சமாளிக்க முடியாமல் தொழில் அதிபர்கள் , நடிகர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் திணறி போயுள்ளனர்.

நாடு முழுவதும் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் மீ டூ விவகாரம் குறித்து உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும் என்று வழக்கறிஞர் ஒருவர் கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், மீ டூ விவகாரத்தில் தாமாக முன்வந்து உச்சநீதிமன்றம் விசாரிக்க முடியாது என தெரிவித்துள்ளனர்.

Comment

Successfully posted