அவரவர் தனிப்பட்ட விவகாரத்தில் தலையிட முடியாது "மீ - டூ" குறித்து லதா ரஜினிகாந்த் கருத்து

Oct 25, 2018 07:51 PM 647

மீ டூ விவகாரம் அவரவர் தனிப்பட்ட பிரச்னை என்றும், அது குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை எனவும், லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். குழந்தைகளின் நலனுக்காக ஸ்ரீ தயா அறக்கட்டளையை ஆரம்பித்து லதா ரஜினிகாந்த் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.

அந்த அமைப்பு சார்பில் குழந்தைகள் குடும்ப திருவிழாவை நவம்பர் 2ம் தேதி சென்னையில் லதா ரஜினிகாந்த் நடத்த உள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், செல்போனும் சமூக வலைத்தளமும் குழந்தைகள் பெற்றோரிடையே பெரிய பிரிவை ஏற்படுத்தியிருப்பதாக வேதனை தெரிவித்தார். மீ டூ குறித்து கருத்து கூறிய அவர், இது அவரவர் தனிப்பட்ட விவகாரம் என்று குறிப்பிட்டார்.Comment

Successfully posted