மேட்டூர் அணையின் நீர் வரத்து 8,900 கன அடியாக அதிகரிப்பு

Jul 30, 2019 06:07 PM 363

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து, அந்த அணைகளில் இருந்து காவிரியில் விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர், தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று, விநாடிக்கு 8 ஆயிரத்து 400 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 8 ,900 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக, விநாடிக்கு ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர்திறப்பை காட்டிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. கடந்த 7 நாட்களில் நீர்மட்டம் 7.36 அடியும் ,நீர் இருப்பு 4.03  டி.எம்.சி.யும் அதிகரித்துள்ளது.  நேற்று 45.33 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று 46.49 அடியாக அதிகரித்தது. நீர் இருப்பு 15.67 டிஎம்சியாக உள்ளது.

Comment

Successfully posted