அ.தி.மு.க. ஐ.டி. அணி புதிய நிர்வாகிகளுக்கு அமைச்சர் சி.வி.சண்முகம் வாழ்த்து

Sep 22, 2020 06:23 PM 190

அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்பப் பிரிவுக்கு புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

விழுப்புரம், திண்டிவனம், மரக்காணம், மயிலம், அனந்தபுரம், வானூர், செஞ்சி உள்பட, மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஒன்றியங்களுக்கு, அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கான புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் அனைவரும், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தை, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இதில், தொழில் நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் முகமது சலீம், திண்டிவனம் நகர செயலாளர் உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Comment

Successfully posted