சரியாக சாப்பிடாமல், தூங்காமல் உள்ளதால் ஸ்டாலினுக்கு உடல்நிலை பாதிப்பு - அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்

Oct 18, 2018 06:59 PM 749

சென்னை மூலகொத்தளத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், இன்னும் 100 ஆண்டுகள் அதிமுக அரசு நிலைக்கும் என்றார்.

அதிமுக என்ற இமயமலையை, எஃகு கோட்டையை யாரும் தகர்க்க முடியாது என்றும் அதனை தகர்க்க முயல்பவர்களின் மண்டை தான் உடையும் என்றார்.

மு.க.ஸ்டாலின் கனவிலேயே மிதக்க கூடியவர் என குறிப்பிட்ட அவர், முதலமைச்சர் கனவு ஸ்டாலினை தூங்க விடுவதில்லை என்றார். இதனால் ஸ்டாலின் சரியாக சாப்பிடுவதில்லை என்றும் இதனால் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது என்றும் கிண்டல் அடித்தார்.


ஸ்டாலின் நினைப்பது போன்று 2019 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வராது என தெரிவித்த அமைச்சர், 2019 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வருவதை அவரது எம்.எல்.ஏக்களே விரும்ப மாட்டார்கள் என்றார்.


நாடாளுமன்றத் தேர்தலில் 40க்கு 40 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெறும் என குறிப்பிட்ட அவர், வாழ்நாள் முழுவதும் அதிமுக தொண்டனாக இருப்பதையே தானும், அதிமுக தொண்டர்களும் விரும்புவதாக தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தலுக்கு அதிமுக தயாராகிவிட்டதாகவும் தெரிவித்தார்.

Comment

Successfully posted