திணறும் ஸ்டாலின் - காரணம் என்ன?

Jul 07, 2021 05:27 PM 377

தேர்தலில் வாக்குறுதிகளை அள்ளித் தெளித்த ஸ்டாலின், அவற்றை நிறைவேற்ற முடியாமல் தத்தளிப்பதாக, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

சென்னை ராயபுரத்தில், வடசென்னை தெற்கு-கிழக்கு மாவட்ட வழக்கறிஞர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவினருடன், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டமன்றத் தேர்தலில் வாக்குகளைப் பெற வேண்டும் என்பதற்காக, தி.மு.க. மக்களை ஏமாற்றியுள்ளதாகக் குற்றம்சாட்டினார். தமிழ்நாட்டில் பல முகாம்களில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவதாக குற்றம்சாட்டிய அவர், 38 எம்.பி.க்களை வைத்திருந்தும் தமிழ்நாட்டிற்கு தேவையான தடுப்பூசிகளை பெற்றுத்தர திமுக தவறிவிட்டதாக கூறினார்.

Comment

Successfully posted