குடிநீர் பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடம் இல்லை - நடிகர் கமலஹாசனுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ பதிலடி

Oct 13, 2018 07:19 PM 533

தமிழகத்தில் குடிநீர் பற்றாக்குறை என்ற வார்த்தைக்கே இடம் இல்லை என்று, நடிகர் கமலஹாசனுக்கு செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ பதிலடி கொடுத்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட புதிய அரசு பேருந்துகளை, மக்கள் பயன்பாட்டிற்காக அமைச்சர் கடம்பூர் ராஜூ கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் குடிநீர் பற்றாக்குறை உள்ளதாக தெரிவிக்கும் நடிகர் கமலஹாசன் உண்மைக்கு முரணான கருத்தை பதிவு செய்வதாக கண்டனம் தெரிவித்தார்.

234 தொகுதிகளிலும் ஆயிரத்து 200 கோடி ரூபாய் முதலீட்டில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருவதை சுட்டிக் காட்டிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, கட்சி விதிமுறைகளை மீறி கருணாஸ் செயல்பட்டால் அவர் மீது சட்டப்படி கொறடா நடவடிக்கை மேற்கொள்வார் என்று என்று தெரிவித்தார்.

Comment

Successfully posted

Super User

good