கொரோனா உயிரிழப்பில் பச்சைப்பொய் பேசும் அமைச்சர் மா.சு

Jul 21, 2021 05:35 PM 2308

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என்ற வடிகட்டிய பொய்யை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியிருப்பது ஆதாரத்துடன் அம்பலமாகியுள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, கொரோனா நோயாளி ஒருவர் கூட, ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழக்கவில்லை எனத் தெரிவித்தார்.

ஆனால், பிரதமருக்கு ஸ்டாலின் எழுதிய முதல் கடிதத்தில், ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் 13 பேர் உயிரிழந்ததாக குறிப்பிட்டிருந்தார்.

தற்போது, இதை மறந்து தடுமாற்றுத்துடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு ஏற்படவே இல்லை என கூறியிருக்கிறார்.

Comment

Successfully posted