அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வனை ஆதரித்து அமைச்சர் எம்.சி. சம்பத் வாக்கு சேகரிப்பு

Oct 19, 2019 01:10 PM 278


விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வனை ஆதரித்து, தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

வரும் 21 ஆம் தேதி நடைபெறவுள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலின் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடையவுள்ளதால், அதிமுக அமைச்சர்கள் இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், விக்கிரவாண்டியில் அதிமுக சார்பில் போட்டியிடும் முத்தமிழ்செல்வனை ஆதரித்து, தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் பிரசாரம் மேற்கொண்டார். வி.சாத்தனூர், ஆசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், வீடு வீடாகச் சென்று அதிமுக அரசின் சாதனைகளை மக்களிடம் விளக்கிக் கூறி அமைச்சர் சம்பத் வாக்கு சேகரித்தார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக தலைவர் ஸ்டாலினின் திண்ணை பிரசாரம் எடுபடாத பிரசாரம் என்றும், ஸ்திரத் தன்மையில்லாமல், முன்னுக்கு பின் முரணாக ஸ்டாலின் பேசி வருவதாகவும் சாடினார்.

Comment

Successfully posted