அம்மா உணவகங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை - அமைச்சர் வேலுமணி தகவல்

Oct 15, 2018 04:19 PM 419

சென்னை எழும்பூர் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் உணவுகளில் தரம் குறித்து உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி ஆய்வு மேற்கொண்டார்.

சுகாதார வசதி, உணவின் தரம் உள்ளிட்டவைகள் குறித்து ஊழியர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
தமிழகம் முழுவதும் 658 உணவகங்கள் உள்ளதை குறிப்பிட்டார். ஆய்வின் போது,

தண்ணீர் சுத்திகரிப்பு பாதிக்கப்பட்டிருந்ததாகவும், உடனடியாக அதனை சரிசெய்ய உத்தரவிடப்பட்டதாக தெரிவித்தார். அணைத்து அம்மா உணவகங்களில் தரமான வகையில் உணவு வழங்கப்படுவதாகவும்,


மருத்துவமணை உள்ளிட்ட இடங்களில் சிறப்பாக செயல்படுகிறது என்றும் தெரிவித்தார். அம்மா உணவகத்தில் சிறு தவறுகள் நடைபெற்றாலும்
கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

அம்மா உணவகத்தை அதிகரிக்க முதலமைச்சரின் கோரிக்கை வைத்துள்ளோம்

 

 

 

Comment

Successfully posted

Super User

வணக்கம் அமைச்சர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்