அமைச்சர் உதயகுமார் நாங்குநேரியில் தீவிர வாக்கு சேகரிப்பு

Oct 19, 2019 01:06 PM 334

நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு, அதிமுக வேட்பாளர் நாராயணனை ஆதரித்து வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைதேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் முடிவடைய உள்ளதால், அதிமுக அமைச்சர்கள் இறுதிகட்ட பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், நாங்குநேரியில் அதிமுக சார்பில் களமிறக்கப்பட்டுள்ள வேட்பாளர் நாராயணனை ஆதரித்து, வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கீழநத்தம் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். வீடு வீடாகச் சென்று அதிமுகவின் சாதனைகளை மக்களுக்கு விளக்கி, அவர் வாக்கு சேகரித்தார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், சுதந்திரம் அடைந்த பிறகு, அதிமுக ஆட்சியில் தான் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு உள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.

Comment

Successfully posted