ஏ.கே 47 துப்பாக்கி வேகத்தில் எதிர்கட்சியினர் பொய் கூறி வருகின்றனர் - பிரதமர் மோடி

Nov 04, 2018 01:01 PM 657

எதிர்க்கட்சிகள் ஏ.கே 47 துப்பாக்கி வேகத்தில் பொய் கூறி வருகிறார்கள் என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.


பா.ஜ.க பூத் கமிட்டி ஊழியர்களிடையே நேற்று பிரதமர் மோடி கலந்துரையாடினார். அதில் பேசிய அவர், தொழில் நடத்த எளிதான நாடுகள் பட்டியலில் ஓராண்டில் 100வது இடத்திலிருந்து 77வது இடத்தை அடைந்துள்ளோம். இது பெருமைபட வேண்டிய தருணம் என்று குறிப்பிட்டார். எதிர்க்கட்சியினர் ஏ.கே.47 குண்டுகளை வெளியிடும் வேகத்தில் பொய்களை கூறி வருகின்றனர். அவர்களது பொய்களை வெளிப்படுத்த வேண்டும். எதிர்க்கட்சிகள் அமைத்து வரும் கூட்டணி குறித்து நாம் பயப்பட தேவையில்லை. அவர்களின் செயல்கள் மக்களிடையே எதிர்மறை எண்ணத்தை தான் ஏற்படுத்தியிருக்கின்றன என்று கூறினார். சரியான தகவல்களையும், அரசின் நலத்திட்டங்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியது தொண்டர்களின் முக்கிய கடமை என்று வலியுறுத்தினார்.

 

 

Comment

Successfully posted