மோடிக்கு சியோல் அமைதிக்கான விருது வழங்கி தென்கொரிய கவுரவிப்பு

Oct 24, 2018 08:27 PM 695

பொருளாதார தொலைநோக்கு மூலம் உலக அமைதிக்கு பங்காற்றியதற்காக 2018-ம் ஆண்டிற்கான சியோல் அமைதி விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட உள்ளது. தென் கொரியா அரசின் சார்பாக சர்வதேச அளவில் அளித்த பங்களிப்புக்காக 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை சியோல் அமைதி விருது வழங்கப்பட்டு வருகிறது.

1990 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் இவ்விருதை ஐநா-வின் முன்னாள் பொது செயலாளர் கோஃபி அனான், பான் கி மூன், ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் போன்ற சர்வதேச தலைவகள் பெற்றுள்ளனர். அந்த வரிசையில் பிரதமர் மோடிக்கு சியோல் அமைதிக்கான விருது அறிவித்து தென் கொரிய அரசு கவுரவித்துள்ளது.

உலக அமைதிக்காக பிரதமர் மோடி ஆற்றிய பங்களிப்பு, மற்றும் மோடினாமிக்ஸ் (modinomics) என்னும் பெயரில், இந்திய பொருளாதார வளர்ச்சிக்கும், உலக பொருளாதார வளர்ச்சிக்கும், பங்காற்றியது மற்றும் மனித மேம்பாடு, ஜனநாயகத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்காக இந்த விருது வழங்கப்படுவதாக வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார். இதற்கிடையே தனக்கு இந்த விருதை அறிவித்ததற்காக கொரிய குடியரசிற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். இந்த விருதை பெறும் 14 வது நபர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.


Comment

Successfully posted