வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி முன்னிலை

May 23, 2019 11:23 AM 312

நாடு முழுவதும் ஏப்ரல் 11-ந் தேதி தொடங்கி, மே 19-ந் தேதி வரையில் 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்பட்டது. மிகப் பெரிய ஜனநாயக திருவிழாவான இந்த தேர்தல் திருவிழாவில் வாக்காளர்கள் தங்கள் தேர்தல் கடமையை ஆற்றினர்.இன்று நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை காலை முதல் நடைபெற்று வருகிறது.

தற்போது வாரணாசி தொகுதியில் நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் பாஜக வேட்பாளர் பிரதமர் மோடி 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.

Comment

Successfully posted