வேளாண் சட்டத்திற்கு எதிராக போராடும் எதிர்கட்சிகளின் நோக்கத்தை நாடு அறியும் - பிரதமர் மோடி

Sep 29, 2020 05:44 PM 509

"நமாமி கங்கே மிஷன்" திட்டத்தின் கீழ், உத்தரகண்ட்டில் 6 மெகா திட்டங்களை பிரதமர் துவக்கி வைத்தார். காணொலி மூலம் கலந்துகொண்ட அவர், கலாச்சார வளர்ச்சி மற்றும் பல்லுயிர் பெருக்கம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் அருகாட்சியகத்தையும் திறந்து வைத்தார். அப்போது பேசிய பிரதமர் மோடி, விவசாயத் துறையில் சீர்திருத்தங்கள் ஏற்படுத்தும் வகையில் கொண்டு வரப்பட்ட வேளாண் சட்டத்தை, எதிர்க்கட்சிகள் அரசியல் லாபத்திற்காக எதிர்ப்பதாக தெரிவித்தார்.

இச்சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தும் எதிர்கட்சிகளின் நோக்கம் என்ன?, என கேள்வி எழுப்பிய பிரதமர், அவர்களின் திட்டத்தை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள் எனத் தெரிவித்தார். மேலும், இடைத்தரகர்கள் லாபம் சம்பாதிக்கவே எதிர்கட்சிகள் விரும்புவதாக மோடி குறிப்பிட்டார்.

Comment

Successfully posted