எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்ட 40 மம்மி சடலங்கள்

Feb 13, 2019 12:43 AM 297

எகிப்தியத் தொல்பொருள் ஆய்வாளர்கள் பதப்படுத்தப்பட்ட 40 மம்மி சடலங்களைக் கண்டுபிடித்துள்ளனர்.

அவற்றுள் 12 சிறுவர்களுடையது. அவை டோலேமிக் காலக்கட்டத்தை(கி.மு 305-30) சேர்ந்தவை என்றும் கண்டுபிடித்துள்ளனர்.

தலைநகர் கைரோவிற்குத் தெற்கே, மின்யா என்னும் இடத்தில் நான்கு புதையிடங்களில் 9 மீட்டர் ஆழத்தில் மம்மிகள் இந்த விதமான மம்மிக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

அவற்றுள் சில கல்சவப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்தன.

சடலங்களின் அடையாளம் தெரியவில்லை என்று கூறிய அதிகாரிகள் அவை முக்கியப் பதவிகளை வகித்தவர்கள் உடல்களாக இருக்கலாம் என்று நம்புகின்றனர்.

Comment

Successfully posted

Super User

news j. very very good news and very nice thank you


Super User

very nice news