முன்பகை - நெல்லையில் ஒருவர் வெட்டிக்கொலை

Jun 27, 2021 11:54 AM 517

திருநெல்வேலி மாவட்டம் ராஜவல்லிபுரத்தில் முன்பகை காரணமாக ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டதை கண்டித்து அவரது உறவினர்கள் விடிய விடிய சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ராஜவல்லிபுரத்தில் கொள்ளை உள்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பாபுக்கும், அருகாமையில் உள்ள கிராமத்தை சேர்ந்த சிலருக்கும் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே, ராஜவல்லிபுரம் குளத்தில் தண்ணீர் திறப்பது தொடர்பாக இரு பிரிவினரிடையே மோதல் இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், குளத்து பகுதியை பார்வையிட்ட இருசக்கர வாகனத்தில் சென்ற பாபுவை 6 பேர் கொண்ட அடையாளம் தெரியாத கும்பல் வெட்டி கொலை செய்தது. சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், பாபுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பாபு இறந்த செய்தியை கேட்டதும், அவரது உறவினர்கள் ராஜவல்லிபுரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய கோரி சுமார் 6 மணி நேரத்திற்கு மேலாக மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார், சமரசம் செய்து கலைத்தனர். கொலை வழக்கு தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Comment

Successfully posted