மதுரை விமானநிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்ட வலியுறுத்தி போராட்டம்

Feb 20, 2019 11:12 AM 279

மதுரை விமானநிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்ட வலியுறுத்தி தேவர் அமைப்பினர் சாலை மற்றும் ரயில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

மதுரை விமானநிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்ட வேண்டுமென்று தேவர் அமைப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனிடையே மீனாட்சி அம்மன் பெயரும் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், விமானநிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட வலியுறுத்தி, மதுரையில் கோரிப்பாளையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் தேவர் அமைப்பினர் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. போலீசாருடன் போராட்டக்காரர்கள் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதால், பரபரப்பான சூழல் நிலவியது. இதையடுத்து, அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

Comment

Successfully posted