மிஷ்கினின் பிசாசு-2 - ஆண்ட்ரியாவா?

Sep 19, 2020 04:18 PM 3308

மிஷ்கினின் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம், சைக்கோ. இந்தப் படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், வசூலிலும் சக்கைபோடு போட்டது. அடுத்து, துப்பறிவாளன்-2 திரைப்படத்தை இயக்கிவந்த அவர், அப்படத்தின் கதாநாயகன் விஷாலுடன் ஏற்பட்ட பிரச்னையால் காரணமாக, பாதியிலேயே படத்தைவிட்டு விலகினார். அதைத் தொடர்ந்து விஷாலே துப்பறிவாளன் 2ஆம் பாகத்தை இயக்கிவருகிறார்.

இந்த நிலையில் தன்னுடைய அடுத்த படம் தொடர்பான அறிவிப்பை, செப் 20ஆம் தேதி வெளியிட உள்ளதாக மிச்கின் சமீபத்தில் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அவர் இயக்கிய பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை அவர் இயக்கவுள்ளதாகவும் அதில் ஆண்ட்ரியாவும் சைக்கோ படத்தில் வில்லனாக நடித்த ராஜ்குமார் பிச்சுமணியும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Comment

Successfully posted