முட்டைக் கோழிகளை கூண்டில் அடைத்து வளர்க்க கூடாது - தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய கோரிக்கை

Oct 28, 2018 08:36 PM 377

முட்டைக் கோழிகளை கூண்டில் அடைத்து வளர்க்க உச்ச நீதிமன்றம் விதித்திற்கும் இடைக்கால தடையை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று நாமக்கல் மண்டல கோழி பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்....கோழி முட்டைகளை உற்பத்தி செய்வதில் நாமக்கல் மண்டலம் இந்தியாவிலேயே 2வது இடத்தில் உள்ளது. இங்கு நாள்தோறும் உற்பத்தியாகும் மூன்றரை கோடி கோழி முட்டைகளில் உள்நாட்டு தேவைகள் போக மீதமிருக்கும் 30 லட்சம் முட்டைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதனிடையே முட்டைக் கோழிகளை கூண்டில் அடைத்து வளர்க்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இதனையடுத்து முட்டைக் கோழிகளை கூண்டில் அடைத்து வளர்க்க கூடாது என கோழி முட்டை உற்பத்தியாளர்களுக்கு அவசர சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்திருக்கும் நாமக்கல் மண்டல கோழி பண்ணையாளர்கள், இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comment

Successfully posted