ஜி7 மாநாட்டில் காணொலி வாயிலாக கலந்துகொள்ளும் மோடி!

Jun 11, 2021 01:51 PM 1924

ஜி7 மாநாட்டில் காணொலி வாயிலாக பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாளை மற்றும் நாளை மறுநாள் (12,13) ஆகிய தேதிகளில் ஜி7 மாநாடு நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த மாநாட்டில்
பிரதமர் நரேந்திர மோடி காணொளிக் காட்சி வாயிலாக பங்கேற்கவுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இத்துடன் இரண்டாவது முறையாக பிரதமர் மோடி ஜி7 மாநாட்டில் பங்கேற்கிறார். இதற்கு முன் 2019ஆம் ஆண்டு பிரான்ஸில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு பிரான்ஸ் சார்பில் அழைப்புவிடுக்கப்பட்டது. அப்போது அம்மாநாட்டில் மோடி பங்கேற்றார்.

பிரிட்டனில் நடைபெறும் ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா சூழலை கருத்தில் கொண்டு ஜி7 மாநாட்டில் பங்கேற்க பிரிட்டனுக்கு மோடி பயணிக்கமாட்டார் என வெளியுறவு துறை அமைச்சகம் கடந்த மாதம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Comment

Successfully posted