நயன் நடிப்பில் தொடர்ந்து ரிலீஸாகும் 7 படங்கள்?

Feb 27, 2019 01:26 PM 932

தமிழ் திரையுலக கதாநாயகிகளில் தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னியாகவும், லேடி சூப்பர்ஸ்டாராகவும் இருப்பவர் நம்ம நயன்தாரா. கிட்டத்தட்ட 15 வருடங்களாக தமிழ் திரையுலக கதாநாயகிகளில் தவிர்க்க முடியாதவராக விளங்கிவரும் நயன், அடுத்து வரும் வருடங்களிலும் அதனைத் தக்கவைப்பார் என்று உறுதியாக சொல்லலாம்...கதையின் நாயகியாக அவர் நடித்த கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள்,விஸ்வாசம் போன்ற திரைப்படங்கள் வெற்றி படங்களாகவே அவருக்கு அமைந்தது. இதனை தொடர்ந்து தனி கதாநாயகியாகவும், முன்னணி ஹீரோக்களின் படங்களிலும் அவர் அடுத்தடுத்து நடித்து வருகிறார். இந்த வருடத்தில் அவர் நடித்து இன்னும் 7 படங்கள் வெளிவரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த வகையில் ஐரா படம் மார்ச் மாத கடைசியில் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதற்கடுத்து கொலையுதிர் காலம் என்ற திரைப்படமும் வெளிவர இருக்கிறது. சிவகார்த்திகேயனுடன் ஜோடியாக நடித்துள்ள மிஸ்டர்.லோக்கல் திரைப்படம் மே மாதத்திலும், நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் படம் தீபாவளிக்கும் வெளிவர காத்துக்கொண்டிருக்கிறது. இதைத்தாண்டி ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் நயன்தாராவை இரண்டாவது முறையாக நடிக்க வைக்கும் முயற்சியும் நடைப்பெற்று வருகிறது.


பிற மொழி படங்களான சைரா என்ற தெலுங்கு படமும்,மலையாளத்தில் லவ் ஆக்‌ஷன் டிராமா என்ற படமும் வெளியாகிறது..மொத்ததுல நம்ம நயன் சினிமாவின் குயின் என்பதில் சந்தேகமேயில்லை....

Comment

Successfully posted