அடுத்த படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரம் இதுவா ?

Sep 16, 2019 12:02 PM 355

விக்னேஷ் சிவன் தயாரிக்கும் அடுத்த படத்தில் நயன்தாரா பார்வையற்ற பெண்ணாக நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

சினிமா என்றாலே ஹீரோ தான் கதையின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவேண்டும் என்பதை உடைத்து லேடி சூப்பர் ஸ்டாராக அறம்,டோரா, மாயா ஆகிய திரைப்படங்களில் கலக்கி வந்தவர் நயன்தாரா.இந்தாண்டு இவரின் நடிப்பில் விஸ்வாசம், ஐரா, மிஸ்டர் லோக்கல் ஆகிய திரைப்படங்கள் வெளிவந்தன.இதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன் தயாரிப்பில் மிலிந்த் ராவு இயக்கத்தில் ’நெற்றிக்கண்’ என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.இந்த படத்தின் போஸ்டர் நேற்று வெளியானது.அதில் படத்தின் பெயர் ப்ரைலி முறையில் எழுதப்பட்டுள்ளதால் நயன்தாரா இந்த படத்தில் பார்வையற்ற பெண்ணாக நடிக்கலாம் என கூறப்படுகிறது..மேலும் இந்த படமானது 2011 ம் ஆண்டு வெளிவந்த' The Blind ' என்ற கொரியன் படத்தின் ரீமேக்காக இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

Comment

Successfully posted