கிசான் திட்ட முறைகேடு : அரசு அதிகாரிகள் 100 பேர் பணியிடை நீக்கம்

Oct 16, 2020 11:07 AM 568

பிரதமரின் கிசான் திட்ட முறைகேடுத் தொடர்பாக, தமிழகத்தில் இதுவரை 101 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அரசு அதிகாரிகள் 100 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் சி.பி.சி.ஐ.டி. தெரிவித்துள்ளது.

பிரதமரின் கிசான் திட்டத்தில் பலர் முறைகேடாக இணைந்து மோசடி நடந்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து தமிழ்நாடு முழுவதும் சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், மோசடியில் ஈடுபட்டதாக இதுவரை 101 பேர் கைது செய்துள்ளதாக சி.பி.சி.ஐ.டி. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோசடி தொடர்பாக வேளாண் அதிகாரிகள் சுமார் 100 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதாகவும் சி.பி.சி.ஐ.டி. தெரிவித்துள்ளது.

முறைகேடாக சேர்ந்தவர்களிடம் இருந்து இருந்து சுமார் 105 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Comment

Successfully posted