2016 தேர்தலைப்போல இந்தாண்டும் வாக்குப்பதிவு - நெல்லை ஆட்சியர்!

Apr 07, 2021 09:16 PM 456

நெல்லை மாவட்டத்தில் 2016ம் ஆண்டு பதிவான வாக்கு சதவீதம் போல், இந்த தேர்தலிலும் வாக்குகள் பதிவாகியிருப்பதாக மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள்  அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள பாதுகாப்பு மையத்தில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் விஷ்ணு, 5 தொகுதிகளில் மொத்தம் 66 புள்ளி 54 சதவீத வாக்குகள் பதிவானதாக தெரிவித்தார். மாவட்டம் முழுவதும் மொத்தம் 9 லட்சத்து 3 ஆயிரத்து 770 பேர் வாக்களித்துள்ளதாக கூறிய அவர், வழக்கம் போல் இந்த தேர்தலிலும் அதே அளவு வாக்குகள் பதிவானதாக குறிப்பிட்டார்.

Comment

Successfully posted