ஆகஸ்ட் 8ல் திரையரங்குகளை அதிர வைக்க வருகிறது 'நேர்கொண்ட பார்வை’..

Jul 15, 2019 06:24 PM 670

நேர்கொண்ட பார்வை திரைப்படம் உலகம் முழுவதும் ஆகஸ்ட் 8ம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக இப்படத்தின் தயாரிப்பாளர் போனி கப்பூர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டில் அமிதாப் பச்சன் நடித்த ‘பிங்க்’ திரைப்படம் தமிழில் ’நேர்கொண்ட பார்வை’ என ரீமேக் செய்யப்படுகிறது.படத்தில் அஜித்குமார் வழக்கறிஞராக நடிக்கிறார். சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களை இயக்கிய வினோத் குமார் இப்படத்தினை இயக்குகிறார்.

இப்படத்தினை போனி கபூர் தயாரிக்கிறார்.இதுவே தமிழில் போனி கபூர் தயாரிக்கும் முதல் படமாகும்.இதில் முக்கிய வேடங்களில் ஸ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் இந்தியில் ‘பிங்க்’ படத்தில் நடித்த ஆண்ட்ரியா தாரங் நடித்துள்ளனர்.இப்படத்தில் நடிகை வித்யா பாலன் முதல் முறையாக தமிழில் நடித்துள்ளார். மேலும் நேர்கொண்ட பார்வை திரைப்படம் ஆகஸ்ட் 8ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக இப்படத்தின் தயாரிப்பாளர் போனி கப்பூர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். திரையரங்குகளை அதிர வைக்க வருகிறது நேர்கொண்ட பார்வை..

image

 

Comment

Successfully posted