சமூக வலைதளங்களில் தொடரும் பிரசாரம்: நெல்லை கலெக்டரின் ஐடியா

Apr 05, 2021 01:41 PM 893

தனி செயலி மூலம் சமூக வலைதளங்களில் விளம்பரம் வருவதை கண்காணிக்க, திருநெல்வேலி மாவட்டத்தில் 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி பாளையங்கோட்டை நாங்குநேரி ராதாபுரம் அம்பாசமுத்திரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் சமூக வலைதளங்களில் பிரதான கட்சியினர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களும் விளம்பரம் செய்வதை கண்காணிக்க 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு தனி செயலி அமைக்கப்பட்டு அதற்கான சேவையினை மாவட்ட ஆட்சித் தலைவரும் தேர்தல் அலுவலருமான விஷ்ணு தொடங்கி வைத்தார்.


நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இதற்கென தனி அலுவலகம் அமைக்கப்பட்டு அந்த செயலி மூலம் வேட்பாளர்கள் பிரச்சாரம் மற்றும் விளம்பரம் செய்கிறார்கள் என்பதை கண்காணிப்பதற்காக ஏழு எல்இடி டிவிகள் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. 

Comment

Successfully posted