முன்னறிவிப்பின்றி பணி நீக்கம்-ஊதியம் வழங்கக் கோரி போராட்டம்!!

Jul 11, 2021 07:44 AM 913

கள்ளக்குறிச்சியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த செவிலியர்கள் பணி நீட்டிப்பு கேட்டும், ஊதியம் வழங்கக் கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

image

கொரோனா சிகிச்சை மையங்களில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 2 மாதங்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செவிலியர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு இதுவரை ஊதியம் எதுவும் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், திடீரென செவிலியர்கள் அனைவரையும் இனி பணிக்கு வரவேண்டாம் என கூறியதால், 70க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

image

சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அலுவலகத்தையும் முற்றுகையிட்ட செவிலியர்கள், தங்களுக்கு பணி நீட்டிப்பு அல்லது பணியை நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

image

ஊதியமும் வழங்காமல், திடீரென வேலையைவிட்டு போகச் சொல்வதால், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக செவிலியர்கள் மனக்குமுறலை வெளிப்படுத்துகின்றனர்.image

வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறும் செவிலியரின் பேட்டியை காண..

⬇⬇⬇⬇⬇

Comment

Successfully posted