அரைகுறை ஆடைகளுடன் ஆட்டம் போட மதபோதகமெனும் பெயரில் மன்மத சேவை மையம்!!

Jul 14, 2021 10:07 AM 2984

கன்னியாகுமரியில், மத போதகம் என்ற பெயரில், பாலியல் தொழிலில் ஈடுபட்டவர் வீட்டில் நடந்த சோதனையில், 19 வயது இளம்பெண் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.image

image

கன்னியாகுமரி மாவட்டம் எஸ்.டி மங்காடு பகுதியில், லால் ஷைன் சிங் என்ற மத போதகர், கடந்த 2 ஆண்டுகளாக வீட்டில் மதபோதகம் செய்து வந்துள்ளார்.

image

அவர் வீட்டுக்கு சொகுசு கார்களில் பல இளம் பெண்களும், ஆண்களும் வருவதும், போவதுமாய் இருந்துள்ளனர். இந்த நிலையில், அங்கு மதபோதகத்தின் பெயரில் பாலியல் தொழில் நடப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன்பேரில் அங்கு சோதனை நடத்தியதில், 19 வயது இளம்பெண் உட்பட வெவ்வேறு வயதுகளில் இருந்த பெண்களும், ஆண்களும், அரைகுறை ஆடைகளுடன் அறைகளில் பிடிபட்டனர்.

image

imageஇதையடுத்து, இளம்பெண், மதபோதகர் உட்பட 7 பேரை கைது செய்த நித்திரவிளை காவல்துறையினர், அவர்களது சொகுசு கார்களையும் பறிமுதல் செய்தனர்.

image

இந்த நிலையில், பிடிபட்ட 19 வயது இளம்பெண்ணை, அவரது தாயே பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது விசாரணையில் வெளியாகி அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
image

மேற்கண்ட செய்தியை காட்சிப்பதிவுகளுடன் காண
⬇⬇⬇

Comment

Successfully posted